/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை
/
வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை கொள்ளை
ADDED : நவ 17, 2025 12:52 AM
மாங்காடு: வீட்டின் பூட்டை உடைத்து, 30 சவரன் நகைகள் கொள்ளையடித்த நபர்கள் குறித்து போலீசார் விசாரிக் கின்றனர்.
மாங்காடு அருகே மலையம்பாக்கம், பாரிகார்டன் பகுதியைச் சேர்ந்தவர் அன்வர் பாஷா 50. இவர், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் ஆடு, கோழி இறைச்சி விற்கும் கடை நடத்தி வருகிறார். நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் வியாபாரத்திற்கு சென்றிருந்தார். அவரது வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்றிருந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை இறைச்சி கடையை மூடிய பின் அன்வர் பாஷா வீட்டிற்கு சென்றார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த, 30 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அவர் அளித்த புகாரை அடுத்து, மாங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.

