/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
300 வணிகர் தொழில் உரிமம் புதுப்பிப்பு
/
300 வணிகர் தொழில் உரிமம் புதுப்பிப்பு
ADDED : மார் 27, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை மாநகராட்சி சார்பில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டசபை அலுவலகத்தில் நேற்று, தொழில் வணிக உரிமம் புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடந்தது.
முகாமை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் துவக்கி வைத்தார். இதில் ஆர்வமுடன், 500க்கும் மேற்பட்ட வணிகர்கள், உரிமம் புதுப்பிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
சிறிது நேரத்திலேயே 300 வணிகர்களுக்கு மாநகராட்சி வருவாய் துறையினரும், மாநகராட்சி பணிகள் மற்றும் நிலைக்குழு தலைவர் சிற்றரசும், உரிமம் புதுப்பித்ததற்கான ஆவணத்தை வழங்கினர்.