ADDED : ஜன 31, 2025 12:21 AM

அ நிறம் | அளவு
ராயபுரம்,ஆண்டுதோறும் ஜன., 30ம் தேதி, உலக தொழு நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே பங்கேற்று, மருத்துவ உபகரணங்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில், தொழுநோய் மற்றும் தோல் மருத்துவம் துறை தலைவர் மருத்துவர். விஜயபாஸ்கர் பேசியதாவது:
நாட்டில் தொழுநோய் பாதிப்பு, 0.45 சதவீதமாகவும், தமிழகத்தில் 0.3 சதவீதமாகவும் உள்ளது. அதன்படி, 2024ல், தேசிய அளவில், 75,394 மற்றும் தமிழகத்தில், 2,434 பேர் புதிதாக தொழு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று இதுவரை, 3,000 பேர் முற்றிலுமாக குணமடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
