/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3.47 கோடி கிலோ குப்பை பண்டிகை நாட்களில் அகற்றம்
/
3.47 கோடி கிலோ குப்பை பண்டிகை நாட்களில் அகற்றம்
ADDED : ஜன 18, 2025 12:25 AM
சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு:
போகி பண்டிகையை முன்னிட்டு, சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், பொதுமக்களிடம் பயன்பாட்டில் இல்லாத பிளாஸ்டிக் டயர் மற்றும் பழைய துணி உள்ளிட்ட பொருட்களை, மாநகராட்சி சார்பில், 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை வீடு, வீடாக பெறப்பட்டன.
அதன்படி, 31,790 கிலோ பழைய துணி, 18,800 கிலோ டயர் மற்றும் டியூப்கள், 24,140 கிலோ பிளாஸ்டிக், 12,310 கிலோ இதர பொருட்கள் உட்பட, பயன்பாட்டில் இல்லாத, 87,320 கிலோ பொருட்கள் பெறப்பட்டது.
மேலும், பொங்கல் பண்டிகைகையொட்டி, வீடுகள்தோறும் சேகரிக்கப்பட்ட மற்றும் பொது இடங்களில் துாய்மை பணியாளர்கள் வாயிலாக, 3.47 கோடி கிலோ குப்பை கழிவு அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.