ADDED : நவ 12, 2026 06:58 PM
அ நிறம் | அளவு
சென்னை: சென்னையில் ஒரே நாளில் எதிர்திசையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக, 3,473 பேர் மீது, போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில், சாலை விதிமீறலில் ஈடுபடுவோரிடம் நேரடியாகவும், ‘சி.சி.டி.வி.’ கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்தும், அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று (நவ.,11) ஒரே நாளில் எதிர்திசையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக, 3,473 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அதுகுறித்து, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியும் அனுப்பி உள்ளனர்.
