/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓ.எம்.ஆரில் மெட்ரோ திட்ட பணி முடிந்த 3.5 கி.மீ., சாலை ரூ.40 கோடியில் சீரமைப்பு
/
ஓ.எம்.ஆரில் மெட்ரோ திட்ட பணி முடிந்த 3.5 கி.மீ., சாலை ரூ.40 கோடியில் சீரமைப்பு
ஓ.எம்.ஆரில் மெட்ரோ திட்ட பணி முடிந்த 3.5 கி.மீ., சாலை ரூ.40 கோடியில் சீரமைப்பு
ஓ.எம்.ஆரில் மெட்ரோ திட்ட பணி முடிந்த 3.5 கி.மீ., சாலை ரூ.40 கோடியில் சீரமைப்பு
ADDED : ஆக 17, 2025 12:54 AM
சென்னை, ஓ.எம்.ஆரில் மெட்ரோ ரயில் பணி முடிந்த, 3.5 கி.மீ., சாலையை, சாலை மேம்பாட்டு நிறுவனத்திடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் ஒப்படைத்து, சாலையை சீரமைக்க, 40 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
மாதவரத்தில் இருந்து அடையாறு வழியாக, சிறுசேரி வரை மெட்ரோ ரயில் பணி நடக்கிறது. இதில், ஓ.எம்.ஆரில் 20 கி.மீ., சாலையின் மைய பகுதியில் பில்லர் அமைத்து, பணிகள் நடக்கின்றன.
இதற்காக, சாலை மேம்பாட்டு நிறுவன பராமரிப்பில் இருந்த இந்த சாலை, மெட்ரோ ரயில் வசம் ஒப்படைக்கப்பட்டது. பணிக்காக, தார் சாலை மற்றும் அணுகு சாலையை சேதப்படுத்தியதால், வாகன நெரிசல் அதிகரித்தது. ஐ.டி., நிறுவனங்கள் அதிகமுள்ள பகுதியானதால், பணியை வேகமாக முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், பில்லர் அமைத்து, யு கிரேடர் பொருத்தி, சாலை மைய தடுப்பு அமைத்த பகுதியை, சாலை மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்தது.
இதன்படி, கொட்டிவாக்கத்தில் இருந்து காரப்பாக்கம் வரை, 3.5 கி.மீ., துாரம், சாலை மேம்பாட்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், அப்பகுதியை சீரமைக்க, 40 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சாலை மேம்பாட்டு நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
மேம்பாலம் அமையும் பகுதியை தவிர்த்து, ஒப்படைக்கப்பட்ட பகுதியில், பழைய சாலையை சுரண்டி எடுத்து, புதிதாக தார் சாலை அமைக்கப்படும்.
அணுகு சாலை, பேவர் பிளாக் பதித்து சீரமைக்கப்படும். இதற்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. பருவமழைக்கு முன், 3.5 கி.மீ., சாலையை சீரமைக்க முடிவு செய்துள்ளோம். இதனால், போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், வாகனங்கள் சீராக செல்ல முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.