ADDED : மார் 16, 2026 05:25 AM
அ நிறம் | அளவு
சென்னை: ஆவடி கமிஷனரகத்தின் கீழ் உள்ள, பொன்னேரி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணிபுரியும் விஜி, சென்னை மாநகர போலீசின் கீழ்ப்பாக்கம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை சைபர் குற்றப்பிரிவில் பணிபுரியும் பிரேமா, எழும்பூர் மகளிர் காவல் நிலையத்திற்கும், பெரம்பலுார் மாவட்டத்தில், பொருளாதார குற்றப்பிரிவில் பணிபுரியும் சிங்காரவேல், வடபழனி காவல் நிலைய குற்றப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
இவர்கள் உட்பட, 36 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சென்னை மாநகர போலீசில் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
