ADDED : ஜன 30, 2024 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட் உத்தரவின்படி, கடந்த வாரத்தில் வெவ்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து, 61 கிலோ கஞ்சா, எட்டு மொபைல் போன்கள், 6.27 லட்சம் ரூபாய், ஆறு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 13 பேர், இம்மாதம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.