/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஒரே சாலையில் 3ம் முறை பள்ளம் வளசரவாக்கத்தில் நீடிக்கிறது பீதி
/
ஒரே சாலையில் 3ம் முறை பள்ளம் வளசரவாக்கத்தில் நீடிக்கிறது பீதி
ஒரே சாலையில் 3ம் முறை பள்ளம் வளசரவாக்கத்தில் நீடிக்கிறது பீதி
ஒரே சாலையில் 3ம் முறை பள்ளம் வளசரவாக்கத்தில் நீடிக்கிறது பீதி
ADDED : நவ 18, 2024 02:46 AM

வளசரவாக்கம்:வளசரவாக்கம் கடம்பன் தெருவில், தொடர்ந்து மூன்றாவது முறையாக திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளதால், பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வளசரவாக்கம் மண்டலம் 152வது வார்டில், கடம்பன் தெரு உள்ளது. இத்தெருவில் மாநகராட்சி சிறுவர் பூங்கா, கழிவுநீர் உந்து நிலையம் ஆகியவை அமைந்துள்ளன.
இங்குள்ள சாய் பாபா கோவிலுக்கு, ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இச்சாலையில் சில மாதங்களுக்கு முன், குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அப்பணிகள் முடிந்த பின், தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆக., மாதம் இச்சாலை உள்வாங்கி, பள்ளம் ஏற்பட்டது.
இதையடுத்து, பள்ளத்தில் மண்கொட்டி சீர் செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த மாதம், அதே சாலையில் இன்னொரு இடத்தில் சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு, கடம்பன் தெருவில் உள்ள கழிவுநீர் உந்து நிலைய வாசலில், 10 அடி ஆழம், 3 அடி அகலம் அளவிற்கு திடீர் பள்ளம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த குடிநீர் வாரிய ஊழியர்கள், பள்ளத்தில் மண் கொட்டி சீர் செய்தனர். தொடர்ந்து ஒரே சாலையில் மூன்று இடங்களில் பள்ளம் விழுந்ததால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.