ADDED : செப் 01, 2025 01:18 AM

தி.நகர், தர்மாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன குப்பையா, 46; பிளம்பர். இவர், நேற்று முன்தினம் இரவு கோவில் தேர் ஊர்வலத்தை பார்த்துக் கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த வேணு, 21, அவரது நண்பர்கள் சிலர், வாத்தியம் அடித்து நடனமாடி வாக்குவாதம் செய்தனர். பின், அங்கு கிடந்த கட்டையால், சின்னகுப்பையாவை தாக்கினர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னகுப்பையா புகாரின்படி, வேணு, அவரது தம்பி பிரவீன்குமார், 19, விஷால், 19, மற்றும் கார்த்திக் 19 ஆகிய நான்கு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
மனைவி நல
வேட்பு விழா
காட்டுப்பாக்கம் மன வளக்கலை மன்றம் அறக்கட்டளை சார்பில், 'மனைவி நல வேட்பு' விழா, பூந்தமல்லியில் உள்ள அய்யப்பன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் 100க்கும் மேற்பட்ட இளம் ஜோடி முதல் முதிய தம்பதி வரை பங்கேற்றனர்.
தம்பதியருக்கு காப்பு கயிறு, பூக்கள், பழங்கள் வழங்கப்பட்டன . தம்பதியர், ஒருவருக்கொருவர் காப்பு கயிறு கட்டி, வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். குடும்பத்தை கவனிக்கும் பெண்களை மகிழ்விக்கவே இந்த விழா கொண்டாடப்படுவதாக, மன வளக்கலை நிர்வாகிகள் தெரிவித்தனர்.