/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொடுக்கல் - வாங்கல் தகராறில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது
/
கொடுக்கல் - வாங்கல் தகராறில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது
கொடுக்கல் - வாங்கல் தகராறில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது
கொடுக்கல் - வாங்கல் தகராறில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது
ADDED : ஜூலை 05, 2025 11:54 PM

சென்னை :வாங்கிய பணத்திற்கு உரிய நேரத்தில் வட்டி தராத பட்டதாரி வாலிபரை காரில் கடத்திச் சென்று தாக்கிய நான்கு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராகுல், 21, திருமங்கலத்தில் தங்கி தனியார் நிறுவனத்தில் தொழிற்பயிற்சி கற்று வருகிறார். தன் சொந்த தேவைக்காக, திருவண்ணாமலையைச் சேர்ந்த சஞ்சய், 23, என்பவரிடம், 85,000 ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளார்.
கடந்த மாதம், வாங்கிய பணத்திற்கான வட்டியை கொடுக்காததால், சஞ்சய் மிரட்டியுள்ளார். மேலும், 2ம் தேதி வீட்டிலிருந்த ராகுலை, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த சஞ்சய் உட்பட சிலர், வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்றனர்.
மண்ணுார்பேட்டையில் வைத்து சரமாரியாக தாக்கிய பின், மீண்டும் அவரது வீட்டிற்கு வந்து இறக்கிவிட்டு, அவரது பட்டதாரி சான்றிதழ்கள், 'டிவி' பாஸ்போர்ட் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து, திருமங்கலம் காவல் நிலையத்தில், ராகுல் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிந்த திருமங்கலம் போலீசார், சஞ்சய், மண்ணுார்பேட்டையைச் சேர்ந்த தினேஷ், 22, சஞ்சீவ்குமார், 19, பிரதீப், 22, ஆகிய நால்வரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் இருசக்கர வாகனம், ராகுல் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற சான்றிதழ்கள், 'டிவி' பாஸ்போர்ட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.