தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வெளிநாட்டு பண பரிமாற்ற அலுவலக பூட்டை உடைத்து திருடிய 4 பேர் கைது

 வெளிநாட்டு பண பரிமாற்ற அலுவலக பூட்டை உடைத்து திருடிய 4 பேர் கைது

 வெளிநாட்டு பண பரிமாற்ற அலுவலக பூட்டை உடைத்து திருடிய 4 பேர் கைது


ADDED : ஜன 16, 2026 08:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 08:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: நந்தம்பாக்கத்தில், வெளிநாட்டு பண பரிமாற்ற அலுவலகத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய, 4 பேரை குஜராத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய் தனர்.

சென்னை, மணப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஜோசப் டோம்னிக், 38. அவர், மணப்பாக்கம் பார்த்தசாரதி தெருவில், வெளிநாட்டு பண பரிமாற்ற அலுவலகம் நடத்தி வருகிறார்.

கடந்த, 7 ம் தேதி அலுவலகத்தை பூட்டி வீட்டிற்கு சென்றார். மறுநாள் காலை அலுவலகத்திற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்து. உள்ளே சென்று பார்த்தபோது, 25 ஆயிரம் ரூபாய் திருடுபோனது தெரியவந்தது. நந்தம்பாக்கம் போலீசார் விசாரித்தனர்.

சம்பவத்தன்று அதிகாலை, 4:00 மணியளவில் ஆட்டோவில் சவாரியாக வந்த, வடமாநில வாலிபர்கள் நான்கு பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின் வடமாநில நபர்கள் பயணித்த ஆட்டோ ஓட்டுநரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் செலுத்திய 'கூகுள்பே' எண்ணை வைத்து விசாரித்தனர்.

இதில், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ரிகு அமர்சிங் சவுஹான், 27, ஜுகேந்திர சிங், 19, அபிஷேக் சிங், 20, யோகேஷ்குமார், 32, ஆகிய நான்கு பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின், தனிப்படை போலீசார் குஜராத்தில் முகாமிட்டு இருந்த நான்கு பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, 23,000 ரூபாய், மூன்று மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரிகு அமர்சிங் சவுஹான் மீது வெளிமாநிலத்தில், 11 வழக்குகளும், ஜுகேந்திர சிங் மீது, 2 வழக்குகளும், அபிஷேக் சிங் மீது, ஒரு வழக்கும் உள்ளது விசாரணையில் தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us