/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.2.30 கோடி தங்கக்கட்டிகள் கடத்தி வந்த 4 பேர் கைது
/
ரூ.2.30 கோடி தங்கக்கட்டிகள் கடத்தி வந்த 4 பேர் கைது
ரூ.2.30 கோடி தங்கக்கட்டிகள் கடத்தி வந்த 4 பேர் கைது
ரூ.2.30 கோடி தங்கக்கட்டிகள் கடத்தி வந்த 4 பேர் கைது
ADDED : ஆக 19, 2025 12:52 AM
சென்னை, துபாயில் இருந்து சென்னைக்கு 2.30 கோடி ரூபாய் மதிப்பு தங்கக்கட்டிகளை கடத்தி வந்த மூன்று இலங்கை பயணியர், ஒப்பந்த ஊழியர் என நான்கு பேரை, சுங்கத்துறை அதிகாரி கள் கைது செய்தனர்.
துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு, வழக்கமாக வரும் தனியார் நிறுவன விமானம், இங்கிருந்து இலங்கைக்கு புறப்படும்.
இந்த விமானம், துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று வந்தபோது, இலங்கைக்கு செல்லும் மூன்று பயணியரை, சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்தனர்.
மூவரும், 'டிரான்சிட்' பயணியர் அமரும் இடத்தின் அருகே உள்ள கழிப்பறைக்கு சென்று வந்தனர். தொடர்ந்து, விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரியும் நபர், அதே கழிப்பறைக்கு சென்று, சிறிது நேரம் கழித்து வெளியே வந்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள், ஒப்பந்த ஊழியரை பிடித்து சோதனை செய்தபோது, அவருடைய ஆடைக்குள் 2.5 கிலோ எடை தங்கக்கட்டி களை மறைத்து எடுத்துவந்தது தெரிந்தது. இதன் மதிப்பு, 2.30 கோடி ரூபாய்.
விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த மூன்று டிரான்சிட் பயணியர், துபாயில் இருந்து தங்கக்கட்டிகளை கடத்தி வந்து, விமான நிலைய கழிப்பறையின் ஓரிடத்தில் மறைத்து வைத்ததும், அதை ஒப்பந்த ஊழியர் எடுத்து வந்ததும் தெரிந்தது.
மூன்று பயணியர், ஒப்பந்த ஊழியர்கள் ஆகிய நால்வரை கைது செய்த சுங்க அதிகாரிகள், தங்கக்கட்டிகளை கடத்தி வரச்சொன்ன கும்பல் குறித்து, அவர்களிடம் விசாரிக்கின்றனர்.