/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதை மாத்திரையுடன் கிண்டியில் 4 பேர் கைது
/
போதை மாத்திரையுடன் கிண்டியில் 4 பேர் கைது
ADDED : பிப் 05, 2026 05:42 AM
கிண்டி: கிண்டி பேருந்து நிலையத்தில், வாடிக்கையாளர்களை வரவழைத்து போதை மாத்திரை விற்ற 4 பேரை, போலீசார் கைது செய்தனர்.
கிண்டி ரேஸ் கோர்ஸ் பேருந்து நிலையத்தில், வாடிக்கையாளர்களை ரகசியமாக வரவழைத்து போதை மாத்திரை விற்கப்படுவதாக, அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி, நேற்று குறிப்பிட்ட இடத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நான்கு பேர் போதை மாத்திரையுடன் நின்றனர்.
அவர்களை பிடித்து விசாரித்ததில், ஆதம்பாக்கத்தை சேர்ந்த பாலாஜி, 20, சரவணன், 21, தீபக் பாண்டியன், 21, அரவிந்த், 21, என தெரிந் தது.
அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 1,190 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

