ADDED : மே 23, 2025 11:51 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை :திருவல்லிக்கேணி போலீசார் நேற்று முன்தினம் இரவு, சி.என்.கே.,சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த, நான்கு சிறுவர்களை போலீசார் மடக்கி விசாரித்தனர்.
திருட்டு வாகனத்தில் வந்தது தெரிய வந்தது. திருவல்லிக்கேணியை சேர்ந்த நான்கு சிறுவர்களும், இரு சக்கர வாகனங்களை திருடுபவர் என்பது தெரிய வந்தது.
போலீசார் நான்கு பேரையும் கைது, சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்ந்த்தனர். இருசக்கர வாகனம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.