/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின் கம்பிகளில் சிக்கி 4 எருமை மாடுகள் பலி
/
மின் கம்பிகளில் சிக்கி 4 எருமை மாடுகள் பலி
ADDED : செப் 08, 2025 06:22 AM

மீஞ்சூர்: மீஞ்சூர் அருகே, அறுந்து கிடந்த மின்கம்பிகளில் சிக்கி, மின்சாரம் பாய்ந்து நான்கு எருமை மாடுகள் பலியாகின.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் பலராமன், 45; கால்நடை விவசாயி. நேற்று காலை, தன்னிடமுள்ள எருமை மாடுகளை, அருகில் உள்ள நந்தியம்பாக்கம் பகுதி மேய்ச்சல் நிலத்தில் விட்டிருந்தார்.
அங்கு, அறுந்து கிடந்த மின்கம்பிகளை, நான்கு எருமை மாடுகள் மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே அவை இறந்தன. தகவலறிந்த மின் வாரியத்தினர், அப்பகுதியில் மின் இணைப்பை துண்டித்து, கம்பிகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
கிராம மக்கள் கூறுகையில், 'நந்தியம்பாக்கம் பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் விபத்து அபாயம் நிலவுவதாக மின் வாரியத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், நான்கு எருமை மாடுகள் இறந்துள்ளன. இனியாவது வாரியம், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.