தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ விடுதியில் மதுபோதையில் 'ரகளை' கல்லுாரி மாணவர்கள் 4 பேர் கைது

 விடுதியில் மதுபோதையில் 'ரகளை' கல்லுாரி மாணவர்கள் 4 பேர் கைது

 விடுதியில் மதுபோதையில் 'ரகளை' கல்லுாரி மாணவர்கள் 4 பேர் கைது


ADDED : மார் 03, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2026 05:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:மதுபான விடுதியில், மாணவியின் தலை முடியை பிடித்து சரமாரியாக தாக்கியதுடன், போதையில் மோதிக்கொண்ட கல்லுாரி மாணவர்கள், கைது செய்யப்பட்டனர்.

சென்னை ஒயிட்ஸ் சாலையில் உள்ள, மதுபான விடுதி ஒன்றில் நேற்று முன்தினம், தனியார் கல்லுாரியை சேர்ந்த மாணவர்கள் மது அருந்தியுள்ளனர். அந்த கும்பலில் கல்லுாரி மாணவி ஒருவரும் இருந்துள்ளார்.

அப்போது, போதையில் செய்வதறியாமல் மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து மோதிக்கொண்டனர். அதில், ஒரு தரப்பினர் மாணவியின் தலை முடியை இழுத்து, தகாத முறையில் பேசி சரமாரி தாக்கினர். இதனால், மற்ற மது பிரியர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, பார் ஊழியர்கள் அவர்களை வெளியற்றினர்.

இந்நிலையில், மாணவர்கள் மோதிக்கொண்ட 'வீடியோ' சமூகவலைதளத்திலும் வெளியானது. தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற அண்ணாசாலை போலீசார், மாணவர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். மாணவியும், தன் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில், 4 மாணவர்களையும், கைது செய்து, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின், நால்வருக்கும் நீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

**

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us