தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ லஞ்ச புகாரில் சிக்கிய 4 போலீசார் 'டிரான்ஸ்பர்'

லஞ்ச புகாரில் சிக்கிய 4 போலீசார் 'டிரான்ஸ்பர்'

லஞ்ச புகாரில் சிக்கிய 4 போலீசார் 'டிரான்ஸ்பர்'


UPDATED : செப் 19, 2026 09:02 PM

ADDED : செப் 19, 2026 08:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 09:02 PM ADDED : செப் 19, 2026 08:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:லஞ்ச புகாரில் சிக்கிய நான்கு போலீசாரை, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சாமூண்டிஸ்வரி பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை மாநகர காவல் துறையில், ஊழல் ஒழிப்புக்கான தனிப்பிரிவு ஆக, 11ம் தேதி துவங்கப்பட்டது. மேலும் ஊழல் தொடர்பான புகார் அளிப்பதற்கான எண்ணும் வெளியிடப்பட்டது. புகார்கள் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் லஞ்ச புகாரில் சிக்கிய திருவல்லிக்கேணி தலைமைக்காவலர் பாலாஜி திருச்சிக்கும், போக்குவரத்து காவலர் பாலசுப்பிரமணியன் தஞ்சாவூருக்கும், புதுவண்ணாரப்பேட்டை தலைமைக்காவலர் அசோக்குமார் சிவகங்கைக்கும், வளசரவாக்கம் காவலர் ராஜேஷ் திருவாரூருக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் சாமூண்டிஸ்வரி பிறப்பித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us