ADDED : அக் 16, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலையூர்,சேலையூரை அடுத்த மதுரபாக்கம் அருகே உள்ள மூலசேரி, அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ராணி, காளிதாஸ். இருவரும் பசு மாடுகளை வைத்து, பால் வியாபாரம் செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது, அப்பகுதியில் உள்ள மின் வடம் அறுந்து சாலையில் விழுந்தது. அந்த சமயத்தில், அவ்வழியாக சென்ற ராணி மற்றும் காளிதாசின், 4 பசு மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே இறந்தன.
மின்வாரிய ஊழியர்கள், விரைந்து இணைப்பை துண்டித்து மாடுகளை அப்புறப்படுத்தினர்; வருவாய் துறையினர் விசாரணை நடத்தினர்.
கால்நடை மருத்துவர்கள், இறந்த மாடுகளின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். சேலையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.