sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மெரினாவில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

/

மெரினாவில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

மெரினாவில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்

மெரினாவில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம்


ADDED : ஜன 19, 2024 12:34 AM

Google News

ADDED : ஜன 19, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, மெரினாவில், குடியரசு தினவிழா கொண்டாட்டம், 26ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், 19, 22, 24, 26 ஆகிய தேதிகளில் காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றப்பட உள்ளன.

இதுகுறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :

 காமராஜர் சாலையில், காந்தி சிலை முதல் போர் நினைவு சின்னம் வரை, காலை, 6:00 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை வாகனங்கள் அனுமதிக்கப்படாது

 அடையாறிலிருந்து, காமராஜர் சாலை வழியாக பிராட்வே நோக்கி செல்லும் சரக்கு மற்றும் வணிக வாகனங்கள் கிரின்வேஸ் சாலை சந்திப்பிலிருந்து, ஆர்.கே. மடம் சாலை, திருவேங்கடம் சாலை, தேவநாதன் சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, டி.டி.கே. சாலை ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஜி.பி. சாலை, அண்ணாசாலை வழியாக செல்லலாம்

 அடையாறிலிருந்து, காமராஜர் சாலை வழியாக பிராட்வே செல்லும் மற்ற வாகனங்கள் காந்தி சிலை அருகே திருப்பி விடப்படும். பின் ஆர்.கே. சாலை, டி.டி.கே.,சாலை கவுடியா மடம் சாலை, ஜி.பி. சாலை, அண்ணாசாலை வழியாக பிராட்வே செல்லலாம்

 மயிலாப்பூரிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும், ராயப்பேட்டை 1 பாயின்டில், வலது புறம் இடது புறமாக செல்லலாம். அரசு பேருந்துகள் இடதுபுறமாக திரும்பி, ஆர்.கே.சாலை மியூசிக் அகடாமி, டி.டி.கே. சாலை, கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை மணிகூண்டு வழியாக பிராட்வே செல்லலாம்

 டாக்டர் நடேசன் சாலை மற்றும் அவ்வை சண்முகம் சாலை சந்திப்பு வழியாக காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், ஐஸ் ஹவுஸ் சந்திப்பு நோக்கி திருப்பி விடப்படும்

 டாக்டர் பெசன்ட் சாலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள், பெசன்ட் சாலை வளைவில், ஐஸ்ஹவுஸ் நோக்கி திருப்பி விடப்படும்

 வாலாஜாசாலை மற்றும் பெல்ஸ் சாலை சந்திப்பில் உழைப்பாளர் சிலை நோக்கி வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலை வழியாக திருப்பி விடப்படும்

 அண்ணாசதுக்கம் அருகில் உள்ள பேருந்து நிலையம், தற்காலிகமாக சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் அருகில் மாற்றப்படும்

 பாரிமுனையிலிருந்து ராஜாஜி சாலை மற்றும் காமராஜர் சாலை வழியாக அடையாறு நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் ரிசர்வ் வங்கி சுரங்கபாதையில் செல்லலாம். பின் அண்ணாமலை மன்றம், வாலாஜா பாயின்ட், அண்ணாசாலை, ஜி.பி. சாலை, வெஸ்ட் காட் சாலை வழியாக செல்லலாம்

 அண்ணாசாலை மற்றும் கொடிமர இல்ல சாலை சந்திப்பிலிருந்து போர் நினைவுச் சின்னம் நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us