/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பட்டாசால் தீ விபத்து 4 குடிசைகள் நாசம்
/
பட்டாசால் தீ விபத்து 4 குடிசைகள் நாசம்
ADDED : நவ 02, 2024 12:40 AM

எண்ணுார், எண்ணுார் காமராஜர் நகர், 7வது தெருவை சேர்ந்தவர் சாகுல் ஹமீது, 45; இவர், எண்ணுார் மார்க்கெட்டில் துணி கடை நடத்தி வருகிறார். இவரதுவீட்டின் மாடியில் நான்கு குடிசை வீடுகளில், சகோதரர்கள் நான்கு பேர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் தீபாவளியன்று, அப்பகுதி மக்கள் வெடித்த பட்டாசு தீப்பொறி பட்டதில், சாகுல் ஹமீது வீடு தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென, அருகில் இருந்த குடிசைகளுக்கும் பரவியது.
எண்ணுார் தீயணைப்பு வீரர்கள், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன், ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீயில் நான்கு குடிசை வீடுகளும் நாசமாகின. அதிஷ்டவசமாக, குடிசைகளில் வசித்தோர் காயமின்றி தப்பினர்.
தீவிபத்து குறித்து, எண்ணுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.