நெசப்பாக்கத்தில் வேரோடு சாய்ந்த அரசமரம்: 4 பேர் காயம்
நெசப்பாக்கத்தில் வேரோடு சாய்ந்த அரசமரம்: 4 பேர் காயம்
UPDATED : ஆக 11, 2026 09:33 PM
ADDED : ஆக 11, 2026 09:32 PM
நெசப்பாக்கம்:நெசப்பாக்கத்தில் அரசமரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில், நான்கு பேர் காயமடைந்தனர்.
நெசப்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள தீமிதி மாரியம்மன் கோவில் வளாகத்தில், பெரிய அரசமரம் நேற்று மதியம் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது.
அங்கு அமர்ந்திருந்தவர்கள் மரத்தின் அடியில் சிக்கினர். அப்பகுதியினர் அவர்களை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்கள் நெசப்பாக்கம் டி.கே.பாணி தெருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலாளி சரவணன், 45, பாரதியார் தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் மாரியப்பன், 50, கே.கே.நகர் கிழக்கு வன்னியர் தெருவைச் சேர்ந்த டிபன் கடை ஊழியர் மணி, 34, ஏரிக்கரையைச் சேர்ந்த கோவிந்தராஜ், 64, ஆகியோர் என்பது தெரியவந்தது. பலத்த காயமடைந்த அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
