ADDED : டிச 18, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேளச்சேரி,
வேளச்சேரி விரைவு சாலையில், நேற்று மதியம், கிண்டியில் இருந்து தரமணி நோக்கி, ஒரு மாருதி பொலினோ கார் தாறுமாறாக சென்றது.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் சென்ற இளநீர் வியாபாரி மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேர் மீது மோதியது.
இதில், அவர்கள் காயமடைந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணையில், காரை இயக்கி வந்தது, திருவெற்றியூரை சேர்ந்த பிரகதீஷ், 35, என தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், போதையில் இருந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, விசாரிக்கின்றனர்.