/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'இன்னுயிர் காப்போம்' திட்டத்தில் 4 லட்சம் பேருக்கு சிகிச்சை
/
'இன்னுயிர் காப்போம்' திட்டத்தில் 4 லட்சம் பேருக்கு சிகிச்சை
'இன்னுயிர் காப்போம்' திட்டத்தில் 4 லட்சம் பேருக்கு சிகிச்சை
'இன்னுயிர் காப்போம்' திட்டத்தில் 4 லட்சம் பேருக்கு சிகிச்சை
ADDED : ஜூலை 07, 2025 04:23 AM

திருவேற்காடு:''இன்னுயிர் காப்போம்- திட்டத்தில் ௪ லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்,'' என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்தார்.
சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை, தமிழக அரசே மேற்கொள்ளும் வகையில் 'இன்னுயிர் காப்போம்- -- -நம்மைக் காக்கும் 48' திட்டம் 2021ல் துவக்கப்பட்டது. இதில், தனியார் மருத்துவமனைகளும் இணைக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ், பாரிவாக்கத்தைச் சேர்ந்த மணிகண்டன், 33, என்பவர், 4 லட்சமாவது நபராக திருவேற்காடு, வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்., மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை நேற்று சந்தித்து நலம் விசாரித்தபின், அமைச்சர் சுப்ரமணியன், கூறியதாவது:
சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரம் மிக முக்கியம் என்பதைக் கருத்தில் வைத்து இத்திட்டம் துவக்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் 2 லட்சம் ரூபாய் தந்து, அவர்கள் உயிர் காப்பாற்றப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களைச் சேர்ந்தோரும் பயனடைந்து வருகின்றனர்.
அந்தவகையில், அரசு மருத்துவமனைகளில் 3,69,785 பயனாளிகளுக்கு 313 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது; தனியார் மருத்துவமனைகளில், 30167 பயனாளிகளுக்கு, 51.95 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 365 கோடி ரூபாய் செலவில், 4 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.