தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பெயின்டர் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் தண்டனை

பெயின்டர் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் தண்டனை

பெயின்டர் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் தண்டனை


ADDED : பிப் 14, 2024 01:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2024 01:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் பாரத் என்ற தக்காளி பாரத், 45; பெயின்டர். இவருக்கும், உறவினரான பார்த்திபன், 18, என்பவரின் சகோதரர் விகாஸ் என்பவருக்கும் இடையே, பணம் கொடுக்கல் - வாங்கல் பிரச்னை இருந்தது.

கடந்த 2018 மே. 7ம் தேதி ஏற்பட்ட தகராறில், விகாைஸ பாரத் வெட்டியுள்ளார். இந்த வழக்கில் கைதான பாரத், ஜாமினில் வெளியே வந்த நிலையில், வீட்டை காலி செய்ய முடிவு செய்தார்.

இதற்காக, 2018 மே. 5ம் தேதி பாரத், அவரது மனைவி ஆகியோர் வாடகை வாகனம் பார்க்கச் சென்று கொண்டிருந்தனர்.

அண்ணா சாலை, நெடுஞ்செழியன் தெரு வழியாக இருவரும் சென்றபோது, விகாசின் சகோதரர் பார்த்திபன் என்ற ஆகாஷ், 18, தேவராஜ், 22, கணேசன், 20, தீபக்குமார், 19, ஆகியோர், பாரத்தை வெட்டினர்.

இதில் படுகாயம் அடைந்த பாரத், மருத்துவமனையில் உயிரிழந்தார். செம்பியம் போலீசார் பார்த்திபன் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வழக்கு விசாரணை, அல்லிக்குளத்தில் உள்ள மாவட்ட 21வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.டி. லட்சுமி ரமேஷ் முன் நடந்தது.

போலீசார் தரப்பில், மாநகர கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பி.சுரேஷ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, 'பார்த்திபன் உள்ளிட்ட நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பு நிரூபித்துள்ளது.

எனவே, அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us