/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காணாமல் போன 4 பேர் மீட்பு குடும்பத்துடன் சேர்த்து வைப்பு
/
காணாமல் போன 4 பேர் மீட்பு குடும்பத்துடன் சேர்த்து வைப்பு
காணாமல் போன 4 பேர் மீட்பு குடும்பத்துடன் சேர்த்து வைப்பு
காணாமல் போன 4 பேர் மீட்பு குடும்பத்துடன் சேர்த்து வைப்பு
ADDED : ஏப் 25, 2025 11:52 PM
சென்னை, காணாமல் போன நான்கு பேரை கண்டறிந்து, குடும்பத்துடன் சேர்த்து வைத்த, காவல் கரங்களைச் சேர்ந்தவர்களை உறவினர்கள் வெகுவாக பாராட்டினர்.
கீழ்ப்பாக்கம் ஹால்ஸ் சாலையில் உடல்நிலைக் குறைபாடால் அவதிப்பட்டு வந்த இலக்கியா, 29 என்பவரை, 14ம் தேதி, காவல் கரங்களைச் சேர்ந்தவர்கள் மீட்டனர்.
விசாரணையில், மதுரை, செல்லுாரில் அவரது குடும்பத்தினரை கண்டறிந்தனர். கணவர் அன்புவுடன் இலக்கியாவை பாதுகாப்பாக சேர்த்து வைத்தனர்.
இதேபோல், சென்னையை சேர்ந்த பிரியா, 7, ராஜலானி, 43, சோனா ஸ்ரீனிவாசன், 54 ஆகியோரை காணவில்லை என, அவர்களது குடும்பத்தினர் தேடி வந்தனர். மூவரையும் கண்டறிந்து, அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து, காவல் கரங்கள் அமைப்பின் உதவி கமிஷனர் பாஸ்கர் கூறியதாவது:
கடந்த 13ம் தேதி முதல் 23ம் தேதி வரை, ஆதரவற்ற நபர்கள் 18 பேரை மீட்டு, அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன காப்பகங்களில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில், குடும்பத்தினரை கண்டறிந்து, நான்கு பேர் சேர்த்து வைக்கப்பட்டனர். மூவர் மனநல சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
உரிமை கோரப்படாத, 48 உடல்கள், அரசு தொண்டு நிறுவனங்கள் உதவியுடன், இறுதி மரியாதையுடன் நல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.