/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோக்கைன் வழக்கில் மேலும் 4 பேர் கைது
/
கோக்கைன் வழக்கில் மேலும் 4 பேர் கைது
ADDED : ஜன 25, 2024 12:53 AM
அண்ணாநகர்,சென்னையில் கோக்கைன் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், அண்ணாநகரை சேர்ந்த அனிருத் சவுத்ரி, பெரும்பாக்கத்தை சேர்ந்த லால்சாம், அங்கூர் சேடா உள்ளிட்ட நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்து 50 கிராம் கொக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது.
கோக்கைன் போதை பொருள் விற்பனை செய்து வந்த, தாம்பரம் அடுத்த மணிமங்கலத்தில் தங்கி இருந்த நைஜிரியா நாட்டு தம்பதி மற்றும் பள்ளிக்கரணையில் தங்கி இருந்த நைஜீரியா நாட்டு வாலிபர் என, மூவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1.250 கிலோ கோக்கைன் பறிமுதல் செய்தனர்.
இவர்கள் சினிமாவில் துணை நடிகர்களாக வேலை பார்த்தபடி, பல்வேறு தொழிலதிபர்களுக்கு கொக்கைன் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இவர்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு, வாட்ஸாப் குழுக்கள் அமைத்து விற்பனை செய்து வந்த நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள நைஜீரிய நாட்டு நபர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.