தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னை துறைமுகத்தில் 4 புது திட்டங்கள் துவக்கம்

 சென்னை துறைமுகத்தில் 4 புது திட்டங்கள் துவக்கம்

 சென்னை துறைமுகத்தில் 4 புது திட்டங்கள் துவக்கம்


ADDED : ஜன 28, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை துறைமுகத்தில், நான்கு புதிய திட்டங்களை, மத்திய கப்பல் துறை செயலர் விஜயகுமார், நேற்று துவக்கி வைத்தார்.

நாட்டின் மூன்றாவது பெரிய துறைமுகமாக, சென்னை துறைமுகம் உள்ளது. 24 கப்பல்கள் நிறுத்தும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ள இந்த துறைமுகத்தில், புதிய திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

இதனிடையே, மத்திய கப்பல் போக்குவரத்து துறை செயலர் விஜயகுமார் நேற்று, சென்னை துறைமுகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, துறைமுகத்தின் செயல்பாடு, நிதி செயல்திறன்கள், வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, சென்னை துறைமுகத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் பயணியர் முனையம், கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு உட்பட 54.27 கோடி ரூபாயில், நான்கு புதிய திட்டங்களை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், சென்னை துறைமுக தலைவர் விஸ்வநாதன் உட்பட அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us