/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரி மாணவரை தாக்கிய 4 பேர் கைது
/
கல்லுாரி மாணவரை தாக்கிய 4 பேர் கைது
ADDED : நவ 22, 2025 04:12 AM
பெருங்களத்துார்: சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரிஹரன், 21. காட்டாங்கொளத்துார் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் படிக்கும் இவர், அதே கல்லுாரியில் படிக்கும் மாணவியுடன் சேர்ந்து, பெருங்களத்துாரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்.
இரண்டு மாதங்களுக்கு முன், ஹரிஹரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, உடன் தங்கியிருந்த பெண், வீட்டில் இருந்து வெளியேறி, தன் தோழிகளின் அறையில் தங்கியுள்ளார்.
ஹரிஹரன் அறையில் இருக்கும் தன் பொருட்களை எடுத்து தரும்படி, கல்லுாரி சீனியரான தாம்பரத்தை சேர்ந்த சந்தோஷ், 27, என்பவரிடம் கூறியுள்ளார்.
இதைய டுத்து, நண்பர்களுடன் ஹரிகரன் அறைக்கு சென்ற சந்தோஷ், ஹரிஹரனை தாக்கி, அவர் அணிந்திருந்த இரண்டு சவரன் செயினை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.
ஹரிஹரன் அளித்த புகாரின்படி, பீர்க்கன்காரணை போலீசார், சந்தோஷ், 27, விஸ்வேஷ், 21, ஷரீப், 25, ராஜா, 21, ஆகிய நான்கு பேரை, நேற்று மு ன்தினம் கைது செய்தனர்.

