/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஆவடியில் நாட்டுவெடி வெடித்து விபரீதம் 4 பேர் பரிதாப பலி; வீடும் தரைமட்டம்
/
ஆவடியில் நாட்டுவெடி வெடித்து விபரீதம் 4 பேர் பரிதாப பலி; வீடும் தரைமட்டம்
ஆவடியில் நாட்டுவெடி வெடித்து விபரீதம் 4 பேர் பரிதாப பலி; வீடும் தரைமட்டம்
ஆவடியில் நாட்டுவெடி வெடித்து விபரீதம் 4 பேர் பரிதாப பலி; வீடும் தரைமட்டம்
ADDED : அக் 20, 2025 04:42 AM

சென்னை: சென்னை ஆவடியில், வீட்டில் பதுக்கி வைத்து விற்கப்பட்ட நாட்டு வெடிகள் வெடித்ததில், நான்கு பேர் உயிரிழந்தனர். வீடும் தரைமட்டமானது.
அ வடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை விவசாய தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 45; பூ வியாபாரி. இவர், மகன்கள் விஜய், 25, அஜய், 22, மகள் ஹேமலதா, 28, ஆகியோரு டன் வசித்து வருகிறார்.
ஆட்டோ ஓட்டுநரான விஜய், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, அதிக சத்தத்துடன் வெடிக்கும் நாட்டு வெடிகளை மொத்தமாக வாங்கி வந்து, வீட்டில் வைத்து, திருவிழா, இறுதி ஊர்வலம் போன்ற நிகழ்வுகளுக்கு விற்பனை செய்து வந்தார்.
தீபாவளி பண்டிகை என்பதால், அதிக அளவில் நாட்டு வெடிகளை வாங்கி வந்து, விற்பனைக்காக வீட்டில் வைத்திருந்தார்.
இந்நிலையில், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த சுனில், 23, ஹாசின், 28, ஆகியோர், நாட்டு வெடி வாங்க, விஜய் வீட்டிற்கு, நேற்று மாலை சென்றனர்.
அப் போது, எதிர்பாராத விதமாக, நாட்டு வெடி குண்டுகள் மொத்தமாக, பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில், வீடு முழுதும் தீப்பிடித்ததுடன், பக்க வாட்டுச்சுவரும் இ டிந்து வீட்டிற்குள் விழுந்தது.
பட்டாபிராம் போலீசார் மற்றும் ஆவடி, அம்பத்துார், பேரணாம்பட்டு உட்பட நான்கு தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 35க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இந்த விபத்தில், சுனில், யாசின் மற்றும் அடையாளம் தெரியாத இருவர் என நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயம்அடைந்தனர்.
பட்டாபிராம் போலீசார், இறந்தோரின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், சம்பவ இடம் சென்று விசா ரணை நடத்தினார்.
பட் டாசு வாங்க வந்த இருவர் இறந்த நிலையில், மேலும் இருவர் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், நாட்டு வெடிகளை வீட்டில் பதுக்கி விற்பனை செய்ய யார் அனுமதி கொடுத்தது என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
20 நிமிடம் வெடி சத்தம் கேட்டது
''என் கைக்குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தேன். அப்போது, சினிமாவில் வருவது போல் பலத்த சத்தத்துடன் வெடிகள் வெடித்து சிதறின. சம்பவம் நடந்த வீட்டை கரும்புகை சூழ்ந்ததால், எங்களால் அருகில்கூட செல்ல முடியவில்லை. தொடர்ந்து, 20 நிமிடங்கள் வரை வெடிகள் வெடித்து கொண்டே இருந்தன. இதனால் நாங்கள் பயத்தில் இருந்தோம். வெடி சத்தம் அதிர்வு, 2 கி.மீ., துாரம் கேட்டுள்ளது. மின் இணைப்பு உடனே துண்டானது. - ராஜேஷ்வரி, 28, இல்லதரசி.