/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகைகள் திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகைகள் திருட்டு
ADDED : பிப் 20, 2026 07:04 AM
திண்டிவனம்: திண்டிவனம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 சவரன் நகை திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சாரம், இந்திரா நகரைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி, 64; இவர் சிவராத்திரியை முன்னிட்டு, கடந்த 15ம் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு, திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் நள்ளிரவு வரை நடந்த பூஜையில் பங்கேற்றார்.
மறுநாள் காலை 8:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, பீரோவில் இருந்த 4 சவரன் நகைகள் மற்றும் 55 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து நாகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் நேற்று வழக்கப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

