sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 துாய்மை பணியாளர்கள் 4 பேருக்கு மூச்சு திணறல் நள்ளிரவில் பரபரப்பு

/

 துாய்மை பணியாளர்கள் 4 பேருக்கு மூச்சு திணறல் நள்ளிரவில் பரபரப்பு

 துாய்மை பணியாளர்கள் 4 பேருக்கு மூச்சு திணறல் நள்ளிரவில் பரபரப்பு

 துாய்மை பணியாளர்கள் 4 பேருக்கு மூச்சு திணறல் நள்ளிரவில் பரபரப்பு


ADDED : ஜன 02, 2026 05:53 AM

Google News

ADDED : ஜன 02, 2026 05:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தொடர் போராட்டத்தை அடுத்து, மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த துாய்மை பணியாளர்களை விடுவித்து, கோயம்பேடில் விடுவதற்கு அழைத்து செல்லும்போது, நான்கு பேருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது.

ராயபுரம், திரு.வி.க., நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி, தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துாய்மை பணியாளர்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் கடந்த 30ம் தேதி, தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயம், முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம், அண்ணாசாலை ஆகிய இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 450 துாய்மை பணியாளர்களை, போலீசார் கைது செய்து சூளை, கண்ணப்பர் திடல் உட்பட பல பகுதிகளில் உள்ள மண்டபங்களில் தங்க வைத்தனர்.

அவர்களை விடுவிப்பதற்காக, நேற்று முன்தினம் இரவு எட்டு பேருந்துகளில் ஏற்றி, வெவ்வேறு பகுதிகளில் இறக்கி விடுவதற்காக சென்றனர்.

அதில் கோயம்பேடு நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த, பட்டாளம் பகுதியைச் சேர்ந்த நிர்மலா, 48 என்பவருக்கு வலிப்பு ஏற்பட்டது. அப்போது, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இறக்குமாறு துாய்மை பணியார்கள் தெரிவித்துள்ளனர். அங்கு வாகனத்தை நிறுத்தாமல், போலீசார் வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் இரவு 12:30 மணியளவில் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

வடபழனியில் போராட்டம்

மேலும் மூச்சுத்திணறல் ஏற்பட்ட ஓட்டேரியைச் சேர்ந்த சரஸ்வதி, மகேஸ்வரி, கோயம்பேடைச் சேர்ந்த தனலட்சுமி ஆகியோரும் அனுமதிக்கப்பட்டனர்.

முன்கூட்டியே கூறியும் மருத்துவமனை முன் நிறுத்தாததால், அவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என, எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, வாகனத்தில் இருந்த மற்ற துாய்மை பணியாளர்கள், நள்ளிரவு 1:00 மணி வரை மருத்துவமனை முன் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின், அந்த துாய்மை பணியாளர்களுக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு, ஆம்புலன்சில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

துாய்மை பணியாளர்களுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடுமை 'சமத்துவம் பொங்கட்டும்' என, சமூக வலைதளத்தில் பேசிவிட்டு, சமூக நீதியை வீசியெறிந்து, சர்வதிகாரப் போக்கில் ஈடுபடும் பாசிச முதல்வர் ஸ்டாலின். புத்தாண்டை வாண வேடிக்கையுடன் உலகமே கொண்டாடிய வேளையில், அறவழியில் போராடிய துாய்மை பணியாளர்களை, எந்த ஒரு அடிப்படை வசதியுமின்றி இருளில் அடைத்து வைத்ததோடு, நள்ளிரவில் திக்கு தெரியாத இடத்தில் இறக்கிவிட்டு, கொடுமைப்படுத்தி இருப்பது கண்டனத்திற்கு உரியது. துாய்மை பணியாளர்களை தவிக்கவிட்ட பாவமே, தி.மு.க., அரசை திக்கு தெரியாமல் துரத்தியடிக்கும். - நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., தலைவர்.








      Dinamalar
      Follow us