தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மண் கடத்தி வந்த 4 லாரிகள் பறிமுதல்

மண் கடத்தி வந்த 4 லாரிகள் பறிமுதல்

மண் கடத்தி வந்த 4 லாரிகள் பறிமுதல்


ADDED : பிப் 09, 2024 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 09, 2024 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, புறநகரில் உள்ள மாவட்டங்களில் இருந்து, அரசிடம் முறையாக அனுமதி பெறாமல், கட்டுமான பணிக்கு மண் கடத்துவதாக, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது.

நேற்று அதிகாலை, சென்னை மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் சுகுணா தலைமையிலான அதிகாரிகள் தரமணி, அடையாறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, அனுமதி பெறாமல் மண் கடத்தி வந்த, நான்கு லாரிகளை மடக்கினர்.

ஓட்டுனர்களிடம் விசாரித்த போது, அவர்கள் முறையான ஆவணங்களைக் காட்டவில்லை; பதிலும் கூறவில்லை. இதையடுத்து, நான்கு லாரிகளையும் பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து, தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us