ADDED : ஏப் 17, 2026 10:31 PM
அ நிறம் | அளவு
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம், 54. இவர், நேற்று முன்தினம் இரவு பூங்கா வெளியே நின்று கொண்டிருந்தார்.
அங்கு மது போதையில் வந்த நால்வர், சண்முகத்திடம் தகராறில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்தனர். அவரை கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர்.
இதில் காயமடைந்த சண்முகம், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து விசாரித்த பேசின்பாலம் போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 27, சூர்யா, 20, பிரகாஷ், 26 மற்றும் பிரேம்குமார், 21 ஆகியோரை கைது செய்தனர்.
