/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
40 வைரங்கள், ரூ.17 லட்சம் பறிமுதல்
/
40 வைரங்கள், ரூ.17 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 21, 2026 10:21 PM
மாதவரம்: ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட 40 வைரங்களை, மாதவரத்தில், தேர்தல் பறக்கும் படையினர், நேற்று பறிமுதல் செய்தனர்.
மாதவரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட செயின்ட் ஆனிஸ் கல்லுாரி அருகே, ஜி.என்.டி., சாலையில், தேர்தல் பறக்கும் படையினர் நேற்று, வாகன சோதனையில் இருந்தனர்.
அப்போது அவ்வழியே வந்த காரை சோதனை செய்தபோது, அதில் வந்தவரிடம் 40 வைரங்கள் இருந்தன. அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அவற்றை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாடியநல்லுார் சுங்கச்சாவடி அருகே, ஆந்திராவில் இருந்த வந்த காரில் 1.35 லட்சம் ரூபாய்; முகப்பேர், திருவள்ளுவர் சாலையில் சுஜித்ராஜா, 29, என்பவரிடம் 4.40 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
வளசரவாக்கம், ஸ்ரீதேவிகுப்பம் பிரதான சாலையில், 'ராயல் என்பீல்டு' இருசக்கர வாகனத்தில் வந்த டாக்டர் சதீஷ்குமார், 47, என்பவரிடம் இருந்து 6 லட்சம் ரூபாய், நேற்று இரவு பறிமுதல் செய்யப்பட்டது.
அத்திப்பட்டைச் சேர்ந்த ரெடிங்ஸ்டன், 35, என்பவரிடம் இருந்து, முகப்பேர் மேற்கு பிரதான சாலையில், 3.50 லட்சம் ரூபாய்; சிந்தாதிரிப்பேட்டை, பிளாக்கர்ஸ் சாலை, கேசினோ திரையரங்கம் அருகே, சவுகார்பேட்டையைச் சேர்ந்த மலைராமன், 60, என்பவரிடம் 94,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
வேளச்சேரி, கனரா வங்கியில் நகை மதிப்பீட்டாளரான லோகநாதன், 45, எடுத்து வந்த 88,500 ரூபாய், வேளச்சேரி அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
பட்டினம்பாக்கம், அய்யப்பன் கோவில் அருகே, 'மாருதி ஷிப்ட்' காரை நிறுத்தி சோதனை செய்ததில், 1.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான புரோட்டின் பவுடர் டப்பாக்கள் இருந்தன. இவையும் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட பவுடர் டப்பாக்கள் மற்றும் பணம், அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டன.

