/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீனவர் வலையில் சிக்கிய 400 கிலோ பால்சுறா மீன்
/
மீனவர் வலையில் சிக்கிய 400 கிலோ பால்சுறா மீன்
ADDED : ஆக 20, 2025 12:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசிமேடு, காசிமேடு மீனவர் வலையில், தலா 400 கிலோ உடைய, இரு பால் சுறா வகை மீன்கள் சிக்கின.
காசிமேடை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சொந்த மான விசைப்படகில் மீனவர்கள், கடந்த வாரம் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, தலா 400 கிலோ எடையுள்ள இரு சுறா மீன்கள், வலையில் சிக்கின.
இவை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. ஒரு மீன் கிலோ 150 ரூபாய் என, 1.20 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாகவும், இவை, கேரளா, ஆந்திராவிற்கு அனுப்பப்பட உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.
இதை உட்கொண்டால், குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரக்கும் என்று நம்பப்படுகிறது.