/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொது நகை கடையில் திருடிய வாலிபரிடம் 42.5 சவரன் மீட்பு
/
பொது நகை கடையில் திருடிய வாலிபரிடம் 42.5 சவரன் மீட்பு
பொது நகை கடையில் திருடிய வாலிபரிடம் 42.5 சவரன் மீட்பு
பொது நகை கடையில் திருடிய வாலிபரிடம் 42.5 சவரன் மீட்பு
ADDED : ஜூன் 02, 2025 03:10 AM

சென்னை:ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் அபய் சுந்தர், 35. இவர், சைதாப்பேட்டையில் ஜூவல்லரி வைத்துள்ளார். இவரது கடையில், மூன்று ஆண்டுகளாக, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித், 24, என்பவர் பணிபுரிந்தார். இந்த நிலையில், தன் தாய்க்கு உடல் நலம் சரியில்லை எனக்கூறி வேலையை விட்டு நின்றுள்ளார். இந்த நிலையில், கடந்த மே மாதம் 7ம் தேதி மீண்டும் பணியில் சேர்ந்தார்.
இந்த நிலையில், கடந்த 12ம் தேதி இரவு கடையை மூடி தலைமறைவானார். மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
சந்தேகமடைந்த அபய் சுந்தர் கடையில் இருந்த நகைகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். அப்போது, கை செயின் பிரிவில் இருந்து, 48 சவரன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து, சைதாப்பேட்டை போலீசார் விசாரித்தனர். இதில், ரோகித் ராஜஸ்தானில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் அங்கு சென்று ரோகித்தை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்து நேற்று சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து, 42.50 சவரன் எடையிலான கை செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டன.