/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வீட்டு பொருட்கள் 42.82 டன் அகற்றம்
/
வீட்டு பொருட்கள் 42.82 டன் அகற்றம்
ADDED : ஜன 11, 2026 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை மாநகராட்சிகளில், சனிக்கிழமைதோறும் வீடுகளில் இருந்து பழைய சோபாக்கள், படுக்கைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் அகற்றப்பட்டு வருகிறது.
அதன்படி, நேற்று 102 இடங்களில் இருந்து, 42.82 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட் டன. இப்பொருட்கள், கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்து சென்று, விஞ்ஞான முறையில் எரியூட்டப்பட்டது.
இதுவரை, 14 சனிக்கிழமைகளில், 1,769 வீடுகளில் இருந்து, 664.68 டன் பயன்பாடற்ற பொருட்கள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

