ADDED : ஆக 24, 2026 02:53 AM

அ நிறம் | அளவு
ஆவடி: ஆவடி மாநகராட்சியின் 48 வார்டுகளில், 18,233 தெரு நாய்கள் உள்ளன. பட்டாபிராம், கோபாலபுரம், அண்ணனுார் உள்ளிட்ட பகுதிகளில், தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, 427 தெரு நாய்களுக்கும் நடப்பாண்டில் இதுவரை, 792 தெரு நாய்களுக்கும் இனக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
தவிர, கல்வி நிறுவனங்களில் சுற்றித்திரிந்த 234 தெருநாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அதேபோல், ப்ளுகிராஸ் மற்றும் தனியார் அமைப்பு வாயிலாக, நடப்பாண்டில் 4,062 தெரு நாய்களுக்கு, வெறிநாய் கடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
