ADDED : ஏப் 02, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
சென்னை:சென்னை மாநகர போலீசில், ஆயுதப்படை பிரிவுக்கு, இரண்டு துணை கமிஷனர்கள் உட்பட, 43 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சட்டசபையில், 2025 - 26ம் ஆண்டுக்கான, காவல் துறை மானிய கோரிக்கையின் போது, முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது, சென்னை மாநகர போலீசில், ஆயுதப்படை பிரிவுக்கு, 21.02 கோடி ரூபாய் செலவில், புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும். இதற்கு, இரண்டு கட்டங்களாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்தார்.
அதன்படி, சென்னை மாநகர போலீசில், ஆயுதப்படை பிரிவுக்கு, இரண்டு துணை கமிஷனர்கள், நான்கு உதவி கமிஷனர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள், 22 எஸ்.ஐ.,க்கள் என, 43 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இப்பணியிடங்கள், புதுப்பேட்டை, பரங்கிமலை, மோட்டார் வாகன பிரிவுக்கு எனவும் ஒதுக்கப்பட்டு உள்ளன.
