/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ.43.40 கோடி அனுமதி
/
தாம்பரம் மாநகராட்சிக்கு ரூ.43.40 கோடி அனுமதி
ADDED : செப் 25, 2024 12:19 AM
சென்னை, தாம்பரம் மாநகராட்சிக்கு, 43.40 கோடி ரூபாயில், புதிய அலுவலகம் கட்ட, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட, சிட்லப்பாக்கம் கிராமத்தில், 4.69 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம், மாநகராட்சி பெயருக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த இடத்தில், 43.40 கோடி ரூபாய்க்கு, மூன்று தளங்களைக் கொண்ட, புதிய அலுவலகம் கட்ட, தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது.
புதிய கட்டடத்தில், அலுவலகம், உயர் அலுவலர்களுக்கான அறைகள், மன்றக்கூடம், கணினி மையம், பொதுமக்கள் காத்திருப்பு அறை, கழிப்பறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, லிப்ட், சாய்வு தளங்கள் என, அனைத்து வசதிகளும் இருக்கும் என, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.