/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'யுகோ' வங்கி வணிகம் ரூ.4.35 லட்சம் கோடி
/
'யுகோ' வங்கி வணிகம் ரூ.4.35 லட்சம் கோடி
ADDED : ஜன 28, 2024 12:49 AM
சென்னை, யுகோ வங்கியின் மொத்த வணிகம், நடப்பு நிதியாண்டில் கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில், 10.46 சதவீதம் அதிகரித்து, 4.35 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 3.94 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதே காலங்களில், வங்கி திரட்டிய டிபாசிட் 5.38 சதவீதம் அதிகரித்து, 2.43 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 2.56 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. வழங்கப்பட்ட மொத்த கடன்கள் 18.63 சதவீதம் அதிகரித்து, 1.51 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 1.79 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
வேளாண் துறைக்கு வழங்கப்பட்ட கடன்கள் 13.22 சதவீதம் அதிகரித்து, 20,627 கோடி ரூபாயில் இருந்து 23,353 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன் 20.79 சதவீதம் அதிகரித்து, 26,625 கோடி ரூபாயில் இருந்து 32,160 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கடந்த ஒன்பது மாதங்களில், வங்கியின் செயல்பாட்டு லாபம் 10.69 சதவீதம் அதிகரித்து, 3,303 கோடி ரூபாயாக உள்ளது.
நிகர லாபம், 1,128 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஒன்பது மாதங்களில், யுகோ வங்கி, 26 புதிய கிளைகளை துவக்கியுள்ளதாக, வங்கியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.