தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மீண்டும் பணியில் சேர்ந்த 448 துாய்மை பணியாளர்கள்

 மீண்டும் பணியில் சேர்ந்த 448 துாய்மை பணியாளர்கள்

 மீண்டும் பணியில் சேர்ந்த 448 துாய்மை பணியாளர்கள்


ADDED : ஜன 06, 2026 05:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 06, 2026 05:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: மாநகராட்சியிலேயே மீண்டும் பணி வழங்க கோரி, துாய்மை பணியாளர்கள் போராடி வரும் நிலையில், 448 பேர் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியில், துாய்மை பணியை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்ததை எதிர்த்து, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் பணியாற்றிய துாய்மை பணியாளர்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள், மீண்டும் பணியில் சேர்ந்து வருகின்றனர்.

அதன்படி, நேற்று ஆறு பேர் பணியில் சேர்ந்து, பணி ஆணை பெற்றனர். இந்த வாரத்தில் மட்டும், 23 பேர் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர்.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

அனைத்து துாய்மை பணியாளர்களின் பணி பாதுகாப்பை மாநகராட்சி உறுதிப்படுத்தி வருகிறது.

போராட்டத்தில் ஈடுபடுவோர், மீண்டும் பணியில் சேர வந்தால், அவர்களுக்கு பணி பாதுகாப்புடன் கூடிய ஆணை வழங்கப்படும். இதுவரை, 448 பேர் பணியில் சேர்ந்துள்ளனர். மேலும், பலர் அடுத்தடுத்து பணியில் சேர உள்ளனர்.

இவ்வாறு அவர்கள்கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us