/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓய்வு ராணுவ அதிகாரியிடம் 49 சவரன் நகை அபேஸ்
/
ஓய்வு ராணுவ அதிகாரியிடம் 49 சவரன் நகை அபேஸ்
ADDED : செப் 08, 2025 06:27 AM
சென்னை:ரயில் நிலைய நடைமேடையில் சென்ற ஓய்வு பெற்ற துணை ராணுவப்படை ஆய்வாளரிடம், 49 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்து தப்பி உள்ளனர்.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் நாகராஜன்; ஓய்வு பெற்ற துணை ராணுவப்படை ஆய்வாளர். இவர், ஆவடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல, நாகர்கோவிலில் இருந்து ஹைதரபாத் விரைவு ரயிலில் மனைவியுடன் விழுப்புரம் வந்துள்ளார்.
அங்கிருந்து இருவரும், சேலம் விரைவு ரயிலில், சென்னை எழும்பூருக்கு நேற்று முன்தினம் வந்து, பூங்கா நகர் ரயில் நிலையம் சென்றுள்ளனர்.
அங்கு, நடைமேடையில் நின்ற நாகராஜனின் பையை பறித்து, மர்ம நபர்கள் தப்பி ஓடினர். அதில், 49 சவரன் நகைகள் இருந்ததாகவும், அதை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும், எழும்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
போலீசார், பூங்கா நகர் ரயில் நிலையத்தில் உள்ள, 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து, நகை பறிப்பு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.