/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லுாப் சாலை மீன் அங்காடி ரூ.4.96 கோடி ஒதுக்கீடு
/
லுாப் சாலை மீன் அங்காடி ரூ.4.96 கோடி ஒதுக்கீடு
ADDED : ஜன 30, 2024 12:38 AM
சென்னை,சென்னை, பட்டினப்பாக்கம், லுாப் சாலையின் இருபுறமும் மீன் அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இதனால், வார இறுதி நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதற்கு தீர்வாக 9.97 கோடி ரூபாய் மதிப்பில் நவீன அங்காடியை மாநகராட்சி கட்டி வருகிறது.
இதில், சுற்றுச்சுவருடன் 366 மீன் அங்காடிகள், குடிநீர் கழிப்பறை, மீன் சுத்தம் செய்யும் பகுதிகள், மீன் அங்காடியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்திகரிக்க 40 கிலோ லிட்டர் கொள்ளளவு உடைய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட வசதிகள் அமைய உள்ளன.
தவிர, 60 இருசக்கர வாகனங்கள், 110 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும், மழைநீர் சேகரிப்பு உட்கட்டமைப்பு வசதி, உயர் கோபுர விளக்குகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில், மின்சாதன பணி, சுற்றுச்சுவர், கட்டட பணி, காவலர் அறை உள்ளிட்ட பணிகளுக்கு கூடுதலாக 4.96 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் வெளியிடப்பட உள்ளது.