/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கையகப்படுத்திய 499 ஏக்கர் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
/
கையகப்படுத்திய 499 ஏக்கர் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
கையகப்படுத்திய 499 ஏக்கர் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
கையகப்படுத்திய 499 ஏக்கர் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு
ADDED : டிச 24, 2024 12:44 AM
சென்னை,
சென்னையில் வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்ட 499 ஏக்கர் நிலம் அதன் உரிமையாளர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டதாக அறிவிப்பு கொடுக்கப்பட்ட நிலங்கள், கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்களுக்கு விலக்கு அளிக்க கோரி, பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வந்தன.
இந்த கோரிக்கை தொடர்பாக முதல்வரின் முன்னெடுப்பு திட்டத்தின் கீழ், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆணையம் வாயிலாக நில நிர்வாக ஆணையர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.
இக்குழுவின் பரிசீலனைக்கு பின், வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்துவதாக அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலங்களில், முதற்கட்டமாக 2,002 ஏக்கர் நிலங்களுக்கு விலக்களித்து அரசாணை வழங்கப்பட்டது.
தொடர்ச்சியாக சென்னை மாவட்டத்தில், சில இடங்களில் சிறப்பு குழு ஆய்வு மேற்கொண்டு அரசிற்கு அறிக்கை அளித்தது.
அதன்படி, வீட்டு வசதி வாரியத்தால் சென்னையில் கொரட்டூர், கொட்டிவாக்கம், விருகம்பாக்கம், நெசப்பாக்கம், போரூர், நெற்குன்றம், முகப்பேர், அம்பத்துார், நொளம்பூர் ஆகிய இடங்களில் கையகப்படுத்தப்பட்ட 499 ஏக்கர் நிலங்களுக்கு, நில எடுப்பில் இருந்து விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்வாயிலாக பயன்பெற்ற 10 பேர், தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி, தலைமைசெயலர் முருகானந்தம், வீட்டுவசதி துறை செயலர் காகர்லா உஷா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.