/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4ம் டிவிஷன் போட்டி மீண்டும் ஒத்திவைப்பு
/
4ம் டிவிஷன் போட்டி மீண்டும் ஒத்திவைப்பு
UPDATED : ஜன 14, 2026 07:15 AM
ADDED : ஜன 14, 2026 05:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆடவருக்கான நான்காம் டிவிஷன் போட்டிகள், சென்னையின் பல்வேறு மைதானங்களில் நடந்து வருகிறது.
இதில் சென்னையைச் சேர்ந்த 20க்கும் அதிகமான கிளப் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே பாதி போட்டிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதமே இந்த போட்டி நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
ஆனால், மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டு, ஜனவரி முதல் வாரத்தில் போட்டிகள் துவங்கின. இந்த நிலையில் வானிலை மாற்றம் மற்றும் மழை காரணமாக மீண்டும் போட்டிகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

