sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கல், பீர் பாட்டிலால் நண்பரை கொலை செய்த 5 பேர் கைது

/

 கல், பீர் பாட்டிலால் நண்பரை கொலை செய்த 5 பேர் கைது

 கல், பீர் பாட்டிலால் நண்பரை கொலை செய்த 5 பேர் கைது

 கல், பீர் பாட்டிலால் நண்பரை கொலை செய்த 5 பேர் கைது


ADDED : ஜன 24, 2026 12:05 PM

Google News

ADDED : ஜன 24, 2026 12:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை, பெரும்பாக்கம் எழில் நகர், தமி ழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, 'யு - பிளாக்'கில் உள்ள பூங்காவில், நேற்று முன்தினம் இரவு பலத்த காயங்களுடன் வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார்.

பெரும்பாக்கம் போலீசாரின் விசாரணையில், அதே பகுதியில் உள்ள 'எஸ் - பிளாக்'கைச் சேர்ந்த ரவுடி கார்த்திகேயன், 25, என்பது தெரியவந்தது. அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த குமார், 27, விஜயகுமார், 28, சரத்குமார், 35, சரண்ராஜ், 29, மற்றும் கார்த்திக், 26 ஆகியோரே, அவரை தீர்த்துக்கட்டியது தெரிய வந்தது.

விசாரணையில் தெரிய வந்ததாவது: சம்பவத்தன்று, எழில் நகரில் பாபு என்பவரின் இறுதிச்சடங்கு நடந்தது. அங்கு சென்ற நண்பர்கள் ஆறு பேரும் மது அருந்தி உள்ளனர்.

போதை இறங்கிய நிலையில், கார்த்திகேயன் மது குடிக்க குமாரின் சட்டைப்பையில் இருந்து பணம் எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது, சட்டைப்பை கிழிந்துள்ளது.

இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து குமார் சென்றுள்ளார். ஆத்திரத்தில் இருந்த குமார் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து, பூங்காவில் மது அருந்தி கொண்டிருந்த கார்த்திகேயனுடன் தகராறு செய்துள்ளார். அப்போது, மது பாட்டிலால் கார்த்திகேயன் மற்றவர்களை தாக்க முற்பட்டுள்ளார்.

அப்போது, ஐந்து பேரும் சேர்ந்து கல் மற்றும் பீர் பாட்டிலால் கார்த்திகேயனை தாக்கியுள்ளனர். இதில், அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் சிறையில் அடைக் கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us