/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயணியருக்கு இடையூறு 5 ஆட்டோக்களுக்கு அபராதம்
/
பயணியருக்கு இடையூறு 5 ஆட்டோக்களுக்கு அபராதம்
ADDED : ஜன 22, 2025 12:37 AM
தாம்பரம், தாம்பரம் பேருந்து நிலையத்தில், பயணியர் ஏறும், இறங்கும் இடத்தில் ஆட்டோக்களை அடாவடியாக நிறுத்தி, பயணியருக்கும், பேருந்துகளுக்கும் இடையூறு ஏற்படுத்துவது அதிகரித்து விட்டது. இதை யாராவது தட்டிக்கேட்டால், ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்று சேர்ந்து, ரவுடிகள் போல் மிரட்டுவது, சில நேரங்களில் தாக்குவது போன்ற சம்பவங்களும் அதிகமாக நடந்து வருகின்றன.
இந்த ஆட்டோக்கள் முறையான ஆவணங்கள் இன்றி இயங்குவதாகவும், ஆட்டோக்களின் அடாவடியை அடக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், தாம்பரம் போக்குவரத்து ஆய்வாளர் செல்லப்பாண்டி தலைமையிலான போலீசார், பேருந்து நிலையத்தில் இடையூறாக நிறுத்தப்பட்ட ஐந்து ஆட்டோக்களை, நேற்று முன்தினம் பறிமுதல் செய்தனர். தலா, 2,500 ரூபாய் அபராதம் விதித்த போலீசார், கடும் எச்சரிக்கையுடன் ஆட்டோக்களை திருப்பி கொடுத்தனர்.