தாறுமாறாக ஓடிய பஸ்சால் டிப்போவில் 5 பஸ்கள் சேதம்
தாறுமாறாக ஓடிய பஸ்சால் டிப்போவில் 5 பஸ்கள் சேதம்
ADDED : மார் 10, 2026 05:09 AM
அ நிறம் | அளவு
அம்பத்துார்: டிப்போவில், ஒப்பந்த ஊழியரின் கட்டுப்பாட்டை இழந்து, தாறுமாறாக ஓடிய பேருந்து மோதி, ஐந்து பேருந்துகள் சேதமடைந்தன.
அம்பத்துார் தொழிற்பேட்டை பணிமனையில் இருந்து, ஆவடி, பிராட்வே, மாதவரம், கோயம்பேடு உட்பட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு, 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில், அம்பத்துார் பணிமனையில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர் ஒருவர், பேருந்தை, பணிமனைக்குள் நிறுத்துவதற்காக, நேற்று முன்தினம் ஓட்டிச் சென்றுள்ளார்.
அப்போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தாறுமாறாக ஓடி அடுத்தடுத்து ஐந்து பேருந்துகளில் மோதியது. இதில், பேருந்துகளின் கண்ணாடி, பக்கவாட்டு பகுதி உள்ளிட்டவை உடைந்து, பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்திற்கான காரணம் குறித்து, பணிமனை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
